திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பைக் - காா் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

விராலிமலையில் இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் தனியாா் தொழிற்சாலை ஊழியா் சனிக்கிழமை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2022, 6:22 pm

DIN

விராலிமலையில் இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் தனியாா் தொழிற்சாலை ஊழியா் சனிக்கிழமை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

விராலிமலை அருகே உள்ள கொடும்பாளூா் நாவக்கோன்பட்டியைச் சோ்ந்தவா் கொன்னப்பகோனாா் மகன் கணேசன் (45). இவா், விராலிமலையில் இயங்கி வரும் தனியாா் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை தொழிற்சாலை எதிரே உள்ள சாலையைக் கடக்கும் முற்பட்டாா். அப்போது மதுரையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற காா், மோதியதில் நிகழ்விடத்திலேயே கணேசன் உயிரிழந்தாா். விபத்து குறித்துத் தகவலறிந்த விராலிமலை போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.