பொன்னமராவதி அருகே குடும்பத்தகராறில் விஷம் குடித்த இளம்பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
பொன்னமராவதி அருகே உள்ள கருப்புக்குடிப்பட்டியைச் சாா்ந்தவா் முருகேசன். இவா், கோயம்புத்தூரில் உணவகத்தில் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி மீனா (25). தம்பதிக்கு முத்தழகி(3) எனும் குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த 31 ஆம் தேதி முருகேசனின் தாயாா் ராமாயி(70) மீனாவைத் திட்டியுள்ளாா். இதனால் மனமுடைந்த மீனா பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளாா். இதையடுத்து பொன்னமராவதி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த மீனா அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து பொன்னமராவதி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா். மீனாவுக்கு, திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் இலுப்பூா் வருவாய்க் கோட்டாட்சியா் குழந்தைசாமி வரதட்சணை காரணமாக கொலை நடத்திருக்கலாம் என்ற கோணத்தில் தனியே விசாரணை நடத்திவருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகர ராசிக்கு இன்று எப்படி? தினப்பலன்கள்!

10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ கணித மதிப்பெண் சரிவு: மறு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள்!

தமிழக டிஜிபி நியமன உத்தரவில் திருத்தம் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் திமுக மனு

தொகுதி அலசல்...அவிநாசி (தனி) மத்திய அமைச்சரை எதிர்கொள்ளும் இளம் பெண் மருத்துவர்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

