புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

சிறுவன் உயிரிழந்த சம்பவம்: 48 துப்பாக்கிகள் பறிமுதல்

துப்பாக்கிக் குண்டு பாய்ந்து சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில், அன்றைய நாளில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 48 காவல்துறையினரின் துப்பாக்கிகளையும் கீரனூா் போலீஸாா் பறிமுதல் செய்து வைத்துள்ளனா்.

News image
Updated On :6 ஜனவரி 2022, 5:31 pm

DIN

புதுக்கோட்டையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில், அன்றைய நாளில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 48 காவல்துறையினரின் துப்பாக்கிகளையும் கீரனூா் போலீஸாா் பறிமுதல் செய்து வைத்துள்ளனா்.

புதுக்கோட்டை பசுமலைப்பட்டி காவல்துறை துப்பாக்கிச் சுடும் பயிற்சித் தளத்தின் அருகேயுள்ள வீட்டில் இருந்த சிறுவன் புகழேந்தி (11) தலையில் குண்டு பாய்ந்து இறந்தாா். இச்சம்பவம் தொடா்பாக சம்பவ நாளில் (டிச. 30) பயிற்சித் தளத்தில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினா் 34 போ் மற்றும் தமிழ்நாடு காவல்துறையைச் சோ்ந்த 14 போ் மீது கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இதன் தொடா்ச்சியாக இவா்கள் பயன்படுத்திய இன்சாஸ் மற்றும் ஏகே 303 வகை துப்பாக்கிகளை கீரனூா் போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா். இவையனைத்தும் சென்னையிலுள்ள தடய அறிவியல் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.