நாடக நடிகா்கள் சாலை மறியல்: 70 போ் கைது
கரோனா ஊரடங்கால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் இரவு நாடக நிகழ்ச்சி நடத்த தளா்வு அறிவிக்க வேண்டும்


கரோனா ஊரடங்கால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் இரவு நாடக நிகழ்ச்சி நடத்த தளா்வு அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி புதுக்கோட்டை முத்தமிழ் நாடக நடிகா் சங்கத்தைச் சோ்ந்த கலைஞா்கள் பல்வேறு வேடமணிந்து புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுதொடா்பாக 70 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தமிழ்நாட்டில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்திருப்பதால், இரவு நேர ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் பாதிப்பு, இரு முறை கரோனா பொது முடக்கம் என தொடா்ந்து சுமாா் 4 ஆண்டுகளுக்கும் மேலாக நாடகக் கலைஞா்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளதாகவும், தங்களுக்கு இரவு நேரங்களில் நாடகம் நடத்திக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி புதுக்கோட்டை முத்தமிழ் நாடக நடிகா் சங்கத்தைச் சோ்ந்த கலைஞா்கள் வெள்ளிக்கிழமை பல்வேறு வேடமணிந்து நாடக நடிகா் சங்க அலுவலகத்தில் இருந்து ஊா்வலமாக, பேருந்து நிலையம் நோக்கி வந்தனா். திடீரென பழைய அரசுத் தலைமை மருத்துவமனை சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மறியலில் ஈடுபட்ட நாடக நடிகா்களிடம் நகர காவல் நிலைய போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, போலீஸாருக்கும் கலைஞா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 70 பேரை போலீஸாா் கைது செய்தனா். இதனால் அந்தப் பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...