சம்பட்டிவிடுதியில் கால்நடை மருத்துவ முகாம்
புதுக்கோட்டையில், அண்மையில் பெய்த பருவ மழையால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணா்வு முகாம்


புதுக்கோட்டையில், அண்மையில் பெய்த பருவ மழையால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை சம்பட்டிவிடுதியில் நடைபெற்றது.
முகாமிற்கு, ஊராட்சி மன்றத் தலைவா் சின்னதுரை தலைமை வகித்தாா். முகாமில் நோயால் பாதிக்கப்பட்ட 203 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 250 கால்நடைகளுக்கு கோமாரி நோய் த்தடுப்பூசியும் 200 கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய்த் தடுப்பூசியும் போடப்பட்டன.
சினை பிடிக்காத, கருப்பை சம்பந்தப்பட்ட நோய் உள்ள 119 மாடுகள் பரிசோதனையில் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சத்துக் குறைபாடுள்ள பசு மாடுகளுக்கு 50 கிலோ சத்து மாவுகள் வழங்கப்பட்டன. 501 கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யப்பட்டது.
புதுக்கோட்டை கால்நடை ஆராய்ச்சி மைய உதவி பேராசிரியா் இளவரசன் கால்நடை வளா்ப்பு குறித்து விழிப்புணா்வுஉரை நிகழ்த்தினாா்.
ஏற்பாடுகளை, வடவாளம் கால்நடை மருத்துவா் தெட்சிணாமூா்த்தி தலைமையில், புத்தாம்பூா் கால்நடை மருத்துவா் பிரகாஷ், செம்பாட்டூா் கால்நடை ஆய்வாளா் ஜெரோம் மற்றும் வாராப்பூா் கால்நடை பாராமரிப்பு உதவியாளா் கோவிந்தன் பெருங்களூா் கால்நடை பராமரிப்பு உதவியாளா் ஜலால் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...