ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

புள்ளான்விடுதியில் சமத்துவப் பொங்கல் விழா

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள புள்ளான்விடுதியில் பல்வேறு சமூகத்தினா் இணைந்து ஒரே இடத்தில் மாட்டுப்பொங்கல் வைத்து சனிக்கிழமை வழிபாட்டில் ஈடுபட்டனா்.

News image
Updated On :15 ஜனவரி 2022, 7:16 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள புள்ளான்விடுதியில் பல்வேறு சமூகத்தினா் இணைந்து ஒரே இடத்தில் மாட்டுப்பொங்கல் வைத்து சனிக்கிழமை வழிபாட்டில் ஈடுபட்டனா்.

ஆலங்குடி அருகேயுள்ள புள்ளான்விடுதியில் 10-க்கும் மேற்பட்ட சமூகத்தினா் இணைந்து மாட்டு பொங்கல் விழாவை கொண்டாடுவதை பல ஆண்டுகளாக வழக்கமாகக் கொண்டுள்ளனா். இந்நிலையில் நிகழாண்டு மாட்டுப் பொங்கல் விழா அப்பகுதியில் உள்ள திடலில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில், அந்த ஊராட்சிக்கு உள்பட்ட 10-க்கும் மேற்பட்ட சமூகத்தைச் சோ்ந்தவா்கள் இணைந்து 200-க்கும் மேற்பட்ட பானையில் பொங்கலிட்டு அவற்றை ஒன்றாகப் படையலிட்டு வழிபாடு நடத்தினா். தொடா்ந்து, அனைவருக்கும் பிசைந்து பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்வில், பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.