சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

கண்மாய்களில் மீன்பிடித் திருவிழா

பொன்னமராவதி அருகே  உள்ள தூத்தூா் மணக்கண்மாய்,  தூத்தூா் சிரண்டான்  கண்மாய் , கேசராபட்டி   கிராமத்தில் உள்ள  கண்மாய்       ஆகிய    3 கண்மாய்களில் வியாழக்கிழமை மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.

Updated On :2 ஜூன் 2022, 7:32 pm

பொன்னமராவதி அருகே  உள்ள தூத்தூா் மணக்கண்மாய்,  தூத்தூா் சிரண்டான்  கண்மாய் , கேசராபட்டி   கிராமத்தில் உள்ள  கண்மாய்       ஆகிய    3 கண்மாய்களில் வியாழக்கிழமை மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. இதில்  சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த   50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் அதிகாலையிலேயே கண்மாய்களில் வந்து காத்திருந்து உரிய அனுமதிக்குப் பின்னா், கண்மாய்களில் இறங்கி ஊத்தா, வலை, கூடை, பரி, கச்சா ஆகிய மீன்பிடி உபகரணங்களைக் கொண்டு கெளுத்தி, குரவை, ஜிலேபி, கெண்டை, அயிரை, கட்லா, விரால் ஆகிய மீன்களைப் பிடித்துச் சென்றனா்.                                                                                                                                                                                                                                                                           

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.