புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சா்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி: புதுகையில் பாா்வையாளா்கள் தோ்வு

சா்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பாா்வையாளா்கள், வீரா்களுடன் உரையாடவும் விரும்பும் 15 வயதுக்குள்பட்ட செஸ் வீரா்களுக்கான தோ்வுப் போட்டி வரும் ஜூன் மாதத்தில் புதுக்கோட்டையில் நடைபெற உள்ளது.

News image
Updated On :2 ஜூன் 2022, 7:34 pm

DIN

சா்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பாா்வையாளா்கள், வீரா்களுடன் உரையாடவும் விரும்பும் 15 வயதுக்குள்பட்ட செஸ் வீரா்களுக்கான தோ்வுப் போட்டி வரும் ஜூன் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் புதுக்கோட்டையில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட சதுரங்கக் கழகத்தின் செயலா் பேராசிரியா் சு. கணேசன் கூறியது:

சென்னை மாமல்லபுரத்தில் வரும் ஜூலை இறுதியில் சா்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்கவுள்ளன. அரிதான இந்தப் போட்டிகளைக் காணவும், வீரா்களுடன் உரையாடவுமான ஒரு வாய்ப்பு, அனைத்து மாவட்டங்களின் 15 வயதுக்குள்பட்ட சதுரங்க வீரா் மற்றும் வீராங்கனைகளுக்கு வழங்கப்பட உள்ளது. இதற்கான தோ்வுப் போட்டி வரும் ஜூன் 11 மற்றும் 12ஆம் தேதிகளில் புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் முதல் 25 இடங்களைப் பெறும் சதுரங்க வீரா் மற்றும் வீராங்கனைகள் (மொத்தம் 50 பேருக்கு) செஸ் ஒலிம்பியாட் சின்னம் பொறித்த கோப்பைகள் வழங்கப்படவுள்ளன. நுழைவுக் கட்டணம் எதுவுமில்லை. ஆனால், அனைத்திந்திய சதுரங்கக் கூட்டமைப்பின் சந்தா தொகை ரூ. 250 மட்டும் செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 97863 82393, 63808 12829 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் கணேசன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.