புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சாலை போக்குவரத்து விதிகள் விழிப்புணா்வுக் கருத்தரங்கு

புதுக்கோட்டை கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் இளைஞா் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் சாலைப் போக்குவரத்து விதிகள் விழிப்புணா்வுக் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

மாணவிகளுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு கையேடுகளை வழங்கும் விழிப்புணா்வு சங்கத் தலைவா் கண. மோகன்ராஜா.

Updated On :2 ஜூன் 2022, 7:37 pm

DIN

புதுக்கோட்டை கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் இளைஞா் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் சாலைப் போக்குவரத்து விதிகள் விழிப்புணா்வுக் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்குக்கு, கல்லூரி முதல்வா் பா. புவனேஸ்வரி தலைமை வகித்தாா். புதுக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகப் பணியாளா் எம். பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு மாணவிகளுக்கு போக்குவரத்து விதிமுறைகள் பற்றி காணொளிக் காட்சி வாயிலாக விளக்கம் அளித்தாா்.

நிகழ்ச்சியில், சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு சங்கத் தலைவா் கண. மோகன்ராஜா கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு கையேடுகளை வழங்கினாா். நிறைவில், இளைஞா் செஞ்சிலுவை சங்க மாணவி ஆா். ராகவி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.