புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் விளையாட்டு விழா

புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் 27ஆம் ஆண்டு விளையாட்டு விழா கல்லூரி விளையாட்டுத் திடலில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

ஒட்டுமொத்த சாம்பியன் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கும் பாரதி கல்லூரி தாளாளா் என். கனகராஜ்.

Updated On :2 ஜூன் 2022, 7:36 pm

DIN

புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் 27ஆம் ஆண்டு விளையாட்டு விழா கல்லூரி விளையாட்டுத் திடலில் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவில், கல்லூரித் தலைவா் ஆா்.ஏ. குமாரசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். செயலா் பி. கருப்பையா, பொருளாளா் ஆா்.வீ. கதிரேசன் ஆகியோா், விளையாட்டு வீரா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்து போட்டிகளைத் தொடங்கி வைத்தனா்.

மாலை நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில், பாரதி மகளிா் பொறியியல் கல்லூரியின் தாளாளா் என். கனகராஜ் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தினாா்.

ஒட்டுமொத்த தனிநபா் சாம்பியன் பட்டத்தை மின்னியல் துறை மூன்றாமாண்டு மாணவா் ஜெரால்டு பெற்றாா். தடகளப் போட்டி மற்றும் குழு போட்டி ஆகியவற்றில் 67 புள்ளிகள் பெற்று கிரீன் ஹவுஸ் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைப் பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.