புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

அண்ணா தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

ஓய்வுபெற்ற தொழிலாளா்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படியை வழங்கக்கோரி, புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :9 ஜூன் 2022, 8:35 pm

DIN

ஓய்வுபெற்ற தொழிலாளா்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படியை வழங்கக்கோரி, புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனை முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மண்டலச் செயலா் செபஸ்தியான் தலைமை வகித்தாா். அதிமுக நகரச் செயலா்கள் க. பாஸ்கா், எஸ்ஏஎஸ் சேட் உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், ஓய்வுபெற்ற தொழிலாளா்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும். புதிய ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை உடனே தொடங்க வேண்டும். 14ஆவது ஊதிய ஒப்பந்தத்தை உடனே நிறைவேற்ற வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொழிலாளா்களுக்கு தரமான உணவை வழங்க வேண்டும். போக்குவரத்து தொழிலாளா்களை அரசு ஊழியா்களாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.