புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

நாளை ரேஷன் திட்ட குறைகேட்பு

சனிக்கிழமை (ஜூன் 11) காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை குறைகேட்புக் கூட்டங்கள் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :9 ஜூன் 2022, 8:37 pm

DIN

பொது விநியோகத் திட்டத்தில் உள்ள குறைகளை பொதுமக்கள் தெரிவிப்பதற்காக புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் சனிக்கிழமை (ஜூன் 11) காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை குறைகேட்புக் கூட்டங்கள் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தெரிவித்துள்ளாா்.

இம்முகாமில் குடும்ப அட்டைதாரா்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல், கைபேசி எண் பதிவு, மாற்றம் ஆகிய சேவைகளை வேண்டி கோரிக்கை அளிக்கலாம். மேலும் நியாயவிலைக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் குடும்ப அட்டைகளில் தங்களுக்குள்ள இடா்பாடுகள், தனியாா் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகாா்களை நுகா்வோா் பாதுகாப்புச் சட்டத்தில் தெரிவித்துப் பயன்பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.