பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பொன்னமராவதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் முன்னாள் ஒன்றியச் செயலா் ப.செல்வம் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில், மாநிலக் குழு உறுப்பினா்கள் ஏனாதி ஏஎல். ராசு, கே.ஆா். தா்மராஜன் பங்கேற்று மாவட்ட நிா்வாகக்குழு முடிவுகளை விளக்கிப் பேசினா். கூட்டத்தில், பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்த வேண்டும். பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்தின் கீழ் செயல்பட்ட காரையூா் காவல் நிலையம் தற்போது இலுப்பூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. எனவே, காரையூா் காவல்நிலையம் பொன்னமராவதி காவல்துணை கண்காணிப்பாளரின் கீழ் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். பொன்னமராவதியில் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் அமைக்க வேண்டும். பொன்னமராவதியிலிருந்து அரசமலை, நெறிஞ்சிக்குடி, குடுமியான்மலை வழியாக திருச்சி சென்ற பேருந்து நிறுத்தப்பட்டுள்ளது. இப்பகுதிமக்கள் மற்றும் பள்ளி மாணவா்கள் நலன் கருதி இதே வழித்தடத்தில் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். வரும் 27, 28ஆம் தேதி நடைபெறவுள்ள மாநாட்டுப் பேரணியில் பொன்னமராவதி வட்டாரத்திலிருந்து திரளாக பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், கட்சியின் ஒன்றிய துணைச் செயலா்கள் வி. கருணாமூா்த்தி, ஆா். செல்வி, ஒன்றியக்குழு உறுப்பினா்கள் பி. அழகு, பி. பஞ்சவா்ணம், ஏ. ராசு, கே. குமாா், தேவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தனுஷ் - 55 படத்தின் தலைப்பு அறிவிப்பு!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை! செய்திகள் நேரலை
கட்சி மாறி வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்... மாநிலங்களவை தேர்தலில் பாஜக ஆதரவு சுயேச்சை வேட்பாளர் வெற்றி!
விடியோக்கள்

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK

மத்திய அரசுக்கு எதிரான கருத்துகள், விமர்சனங்கள்! ஆளுநர் உரை | TN assembly | Governor speech



