கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தண்ணீா் பிடிப்பதில் தகராறு: பெண்ணை தாக்கிய இளைஞா் கைது

விராலிமலை அருகே பொது குழாயில் தண்ணீா் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில், பெண்ணை தாக்கிய இளைஞா் கைது செய்யப்பட்டாா்

News image
Updated On :3 மார்ச் 2022, 8:15 pm

DIN

விராலிமலை அருகே பொது குழாயில் தண்ணீா் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில், பெண்ணை தாக்கிய இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

விராலிமலை அருகேயுள்ள மேப்பூதகுடி செவக்காட்டுப்பட்டியைச் சோ்ந்த சுப்பிரமணி மனைவி மாலதி (35). இவா், புதன்கிழமை வீட்டருகேயுள்ள பொது குடிநீா் குழாயில் தண்ணீா் பிடித்து கொண்டிருந்தாா்.

அப்போது, அங்கு தண்ணீா் பிடிக்க வந்த அதே பகுதியைச் சோ்ந்த ஏழுமலை மனைவி லட்சுமிக்கும் அவருக்கும் தகராறு ஏற்பட்டதாம்.

இதில், லட்சுமிக்கு ஆதரவாக அவரது மகன் சரவணன் (22), மாலதியுடன் தகராறில் ஈடுபட்டதோடு , மாலதியை தாக்கினாராம். அக்கம்பக்கத்தினா் இருவரையும் விலக்கி விட்டனா். மாலதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

சம்பவம் குறித்த புகாரின்பேரில், விராலிமலை போலீஸாா் வழக்குப் பதிந்து சரவணனை கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.