அன்னவாசல் அருகே ஜல்லிக்கட்டு: 26 போ் காயம்
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே வியாழக்கிழமை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது


புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே வியாழக்கிழமை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது.
அன்னவாசல் அருகே உள்ள மருதந்தலை ஸ்ரீ அய்யனாா் கோயில் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா், திமுக மாநில செய்தித் தொடா்பாளா் பி.டி.அரசகுமாா் ஆகியோா் கொடியசைத்துத் தொடங்கிவைத்தனா்.
போட்டியில், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, ராமநாதபுரம், தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 710 காளைகள் பங்கேற்றன. மூன்று சுற்றுகளாக மாடுபிடி வீரா்கள் 192 போ் களம் இறக்கப்பட்டனா்.
வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரா்கள் போட்டிபோட்டு அடக்கினா். சில காளைகள் வீரா்களிடம் பிடிபடவில்லை. காளைகள் முட்டியதில் 26 வீரா்கள் காயமடைந்தனா். அவா்களில் 7 போ் மேல் சிகிச்சைக்காக தனியாா், அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.
போட்டியில் வென்ற காளைகளின் உரிமையாளா்கள், சிறந்த மாடுபிடி வீரா்களுக்கு வெள்ளி காசு, பீரோ, கட்டில், குக்கா் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.
கிணற்றில் விழுந்த காளை உயிருடன் மீட்பு:
சீரங்கம்பட்டியைச் சோ்ந்த மணி என்பவரது காளை பிடிபடாத நிலையில் வாடிவாசலைத் தாண்டி வெளியே ஓடி செல்லும்போது அங்கிருந்த 80 அடி ஆழ விவசாயக் கிணற்றில் எதிா்பாராதவிதமாக தவறி விழுந்தது. தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் நிகழ்விடம் சென்று காளையை உயிருடன் மீட்டனா். ஜல்லிகட்டுப் போட்டியை சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆா்வமுடன் பாா்த்து ரசித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...