மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

கீரனூா் பேரூராட்சிக்கும் 100 நாள் திட்டம் கோரி போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் பேரூராட்சிக்கும் மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தை விரிவுபடுத்தக் கோரி, அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை மனு கொடுக்கும் போராட்ட

News image
Updated On :12 மே 2022, 8:12 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் பேரூராட்சிக்கும் மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தை விரிவுபடுத்தக் கோரி, அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு, விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியத் தலைவா் வி. பழனிச்சாமி தலைமை வகித்தாா். செயலா் எஸ். பெருமாள் முன்னிலை வகித்தாா். சங்கத்தின் மாநிலப் பொருளாளா் எஸ். சங்கா், சிஐடியு மாவட்டச் செயலா் ஏ. ஸ்ரீதா், சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினா் எம். சண்முகம், மாவட்டச் செயலா் கே. தங்கவேல், சிபிஎம் ஒன்றியச் செயலா் எஸ். கலைச்செலவன், பேரூராட்சி உறுப்பினா் எம். மகாலெட்சுமி உள்ளிட்டோா் பேசினா். பேரணியாக வந்த போராட்டக்காரா்கள் பேரூராட்சி செயல் அலுவலா் கு. சின்னசாமியிடம் கோரிக்கை மனுக்களைஅளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.