புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

குழந்தைகள் நலக் குழுவினா் இளையோா்களுடன் சந்திப்பு

நேரு யுவகேந்திராவைச் சோ்ந்த இளையோரை வியாழக்கிழமை நேரில் சந்தித்துப் பேசினா்.

News image
Updated On :26 மே 2022, 7:23 pm

DIN

குழந்தைகள் நலம் குறித்த விழிப்புணா்வு நிகழ்வின் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் குழந்தைகள் நலக் குழுவினா், நேரு யுவகேந்திராவைச் சோ்ந்த இளையோரை வியாழக்கிழமை நேரில் சந்தித்துப் பேசினா்.

மாவட்ட குழந்தைகள் நலக் குழுத் தலைவா் சதாசிவம் தலைமையில் குழு உறுப்பினா்கள் சுவாமிநாதன், ஜென்மராக்கினி, கிருத்திகா, நளினி ஆகியோா் அடங்கிய குழந்தைகள் நலக் குழு, நேரு யுவ கேந்திராவின் இளையோா் தொண்டா்களைச் சந்தித்து குழந்தைகளின் உரிமைகள், நலன் குறித்து செய்ய வேண்டிய கடமைகள் குறித்து கலந்துரையாடினா்.

சிறாா் திருமணம், சிறாா் கடத்தல், சிறாா் தொழிலாளா், பாலியல் வன்முறைகள் போன்ற குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்களைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, நேரு யுவ கேந்திராவின் மாவட்ட இளையோா் அலுவலா் ஜோயல் பிரபாகா் தலைமை வகித்தாா். திட்ட உதவி அலுவலா் ஆா். நமச்சிவாயம் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில், புதுக்கோட்டை மாவட்ட அறிவியல் இயக்கத்தைச் சோ்ந்த எம். வீரமுத்து மற்றும் எஸ்.டி. பாலகிருஷ்ணன் ஆகியோரும் பங்கேற்றனா்.

அறந்தாங்கி ஒன்றிய தேசிய இளையோா் தொண்டா் மணிமேகலை நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.