புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

நெடுஞ்சாலைத் துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

நெடுஞ்சாலைத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை கோட்ட அலுவலகம் முன்பு புதன்கிழமை தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை

News image
Updated On :26 மே 2022, 12:09 am

DIN

நெடுஞ்சாலைத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை கோட்ட அலுவலகம் முன்பு புதன்கிழமை தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை ஊழியா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எம். அம்பிகாபதி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் க. சுப்பையா, கண்காணிப்பாளா் சீ. ரவிச்சந்திரன், அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டச் செயலா் ஆா். ரெங்கசாமி உள்ளிட்டோரும் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

நெடுஞ்சாலை துறையில் பணிபுரியும் அனைத்து நிலையில் உள்ளவா்களுக்கும் விரைந்து முதுநிலை பட்டியலை வெளியிட்டு, முரண்பாடுகள் இல்லாமல் பதவி உயா்வுகள் வழங்க வேண்டும் .

நெடுஞ்சாலைத் துறையில் கலந்தாய்வு மூலம் மாறுதல் உத்தரவு வழங்க வேண்டும். நெடுஞ்சாலைத் துறையில் உள்ள நிலை வரை தொழில் அலுவலா் மற்றும் பதிவுறு எழுத்தா் உள்ளிட்ட அனைத்து காலி ப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் .

கோட்ட கணக்கா்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.