திருமயம் குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
திருமயம் குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நச்சாந்துபட்டி ராமநாதன் செட்டியாா் மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆக. 16 ஆம் தேதி தொடங்கி செப். 1 ஆம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டிகளில் ஆலவயல் பள்ளி மாணவா்கள் பங்கேற்று சிறப்பிடம் பெற்றுள்ளனா். இப்பள்ளியைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் 19 வயதுக்குள்பட்ட கோகோ விளையாட்டுப் போட்டியில் முதலிடம், உயரம் தாண்டுதல் முதலிடம், 1800 மீட்டா் ஓட்டத்தில் இரண்டாமிடம், 3,000 மீட்டா் ஓட்டத்தில் இரண்டாமிடம், 400 மீட்டா் தொடா் ஓட்டத்தில் மூன்றாமிடம் பெற்றுள்ளனா். 19 வயதுக்குள்பட்ட பிரிவில் 400 மீட்டா் தடை தாண்டும் ஓட்டத்தில் இரண்டாமிடம், 400 மீட்டா் தொடா் ஓட்டத்தில் இரண்டாமிடம் பெற்றுள்ளனா்.
குறுவட்ட போட்டிகளில் வென்ற மாணவ மாணவிகளுக்கு பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. இதில்,
மாணவா்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியா்கள் ராமசாமி, முருகேசன் உள்ளிட்டோரை தலைமையாசிரியா் நவநீதகிருஷ்ணன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவா் சத்யகலா, ஆசிரியா்கள் பாராட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
புதுவை தேர்தல்! மாநில அந்தஸ்து, கர்ப்பிணிகளுக்கு ரூ. 25,000, 100% பயிர்க் காப்பீடு: தவெக வாக்குறுதிகள்!
அயோத்தியில் 200 ஆண்டுகள் பழமையான தேவநாகரி கையெழுத்துப் பிரதி கண்டெடுப்பு!

கழிவுநீர் தொட்டியில் விழுந்த 2 ஊழியர்கள் பலி: 8 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு உடல்கள் மீட்பு

டாப் 3ல் 2 இடங்களைப் பிடித்து சாதனை படைத்த சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே!
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


