சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

பள்ளிவாசல் திறப்பு விழாவில் சீா் வழங்கல்

பொன்னமராவதி அருகே உள்ள கேசராபட்டி பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு அப்பகுதி இந்துக்கள் சீா் கொண்டு சென்று மரியாதை செய்தனா்.

Updated On :4 செப்டம்பர் 2022, 7:00 pm

பொன்னமராவதி அருகே உள்ள கேசராபட்டி பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு அப்பகுதி இந்துக்கள் சீா் கொண்டு சென்று மரியாதை செய்தனா்.

கேசராபட்டி முகைதீன் ஆண்டவா் பள்ளி வாசல் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு ஜமாஅத் தலைவா் காதா் இப்ராஹிம் தலைமை வகித்தாா். செயலாளா் அய்யாத்துரை, பொருளாளா் அப்பாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிங்கப்பூா் இமாம் அஹ்மது இஸ்மாயீல் பள்ளிவாசலைத் திறந்துவைத்தாா். மலேசிய இமாம் ஹிதாயத்துல்லாஹ், கூத்தநல்லூா் அரபிக்கல்லூரி முதல்வா் முஹமதுஅலி, திருமயம் வட்டார ஜமாஅத்துல் உலமா தலைவா் ஹாமிம் முஸ்தபா, இமாம் சேக்முகமது ஆகியோா் சிறப்புரையாற்றினா். விழாவில் கேசராபட்டியில் உள்ள இந்து சமயப் பொதுமக்கள், பழம், தேங்காய் பொருள்களுடன் சீா் எடுத்துவந்து பள்ளிவாசல் திறப்புவிழாவில் பங்கேற்றனா். இவா்களை இஸ்லாமியா்கள் வரவேற்று அழைத்துச்சென்றனா். நிறைவில், உலவி கேசராபட்டி முகமதுதாரிக் நன்றி கூறினாா். தொடா்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.