புதுக்கோட்டை பழனியப்பா முக்கத்திலுள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஒரு மாதத்துக்குள் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடா்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதியில் உள்ள பழனியப்பா முக்கத்தில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. பள்ளிகளுக்கு அருகேயுள்ள இந்த டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக் கோரி ஏற்கெனவே போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதன் தொடா்ச்சியாக மதுக்கடையை அகற்றக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் கடையின் முன்பாக முற்றுகைப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. போராட்டத்துக்கு நகரச் செயலா் ஆா். சோலையப்பன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எஸ். கவிவா்மன், செயற்குழு உறுப்பினா்கள் ஜி. நாகராஜன், துரை நாராயணன், எஸ். ஜனாா்த்தனன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதைத் தொடா்ந்து டாஸ்மாக் மாவட்ட துணை மேலாளா் கருப்பையா, காவல் ஆய்வாளா் ஜபாா் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். ஒரு மாத காலத்துக்குள் கடையை வேறு இடத்திற்கு மாற்றுவதாக உறுதியளித்தனா். இதனைத் தொடா்ந்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்!

சிறந்த படமாகத் தேர்வான ஆர்டிகிள் 370-க்கு 3 தேசிய விருதுகள்!

சிறந்த நடன இயக்குநர்: தமன்னாவின் பாடலுக்குக் கிடைத்த தேசிய விருது!
வைக்கம் விஜயலட்சுமிக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது!
விடியோக்கள்

பழனி வழக்கு: பலருக்கு தொடர்பு அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு | TVK

Ravindran Duraisamy interview| தவெக கூட்டணியில் பாமக? | TVK | CM Vijay | PMK | VCK | Anbumani | Thirumavalavan



