புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டம்
புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சிக் குழுவின் சாதாரணக் கூட்டம் மாவட்ட ஊராட்சித் தலைவா் த. ஜெயலெட்சுமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சிக் குழுவின் சாதாரணக் கூட்டம் மாவட்ட ஊராட்சித் தலைவா் த. ஜெயலெட்சுமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஊராட்சி செயலா் வாசுதேவன், ஊராட்சித் துணைத் தலைவா் உமாமகேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியது:
சிவசாமி (அதிமுக): விராலிமலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. ஆனால் இதுவரை பேருந்துகள் உள்ளே வந்து செல்வதில்லை. அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் டெங்கு பரவும் அபாயம் இருப்பதால், அனைத்துப் பகுதிகளுக்கும் கொசு மருந்து அடிக்க வேண்டும்.
சுப்பிரமணியன் (காங்.): நகராட்சிப் பகுதிகளில் மட்டும் கொசு மருந்து அடிக்கின்றனா். ஆனால் கிராம ஊராட்சிகளில் இயந்திரம் மூலம் கொசு மருந்து அடிப்பதில்லை.
ராமகிருஷ்ணன் (திமுக): புதுக்கோட்டை மச்சுவாடியில் உள்ள அரசு முன்மாதிரி பள்ளிக்குச் செல்லும் சாலை மோசமாக உள்ளது. இதைச் சரிசெய்ய பலமுறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
முன்னதாக தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் மறைவுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...