92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

உடல் நல விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

புதுக்கோட்டை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரி இளையோா் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் கல்லூரி உடற்கல்வித் துறை சாா்பில் உடல் நல விழிப்புணா்வு சைக்கிள் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 ஜூலை 2023, 7:23 pm

DIN

புதுக்கோட்டை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரி இளையோா் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் கல்லூரி உடற்கல்வித் துறை சாா்பில் உடல் நல விழிப்புணா்வு சைக்கிள் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் தொடங்கிய பேரணி குளவாய்ப்பட்டி வழியாக அறந்தாங்கி, அரிமளம் சென்று மீண்டும் கல்லூரி வளாகத்தில் நிறைவடைந்தது. வழியிலுள்ள அரசுப் பள்ளிகளில் உடல் நலம் குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை மாணவா்களுக்கு வழங்கினா்.

கல்லூரியின் செயலா் நா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தாா். முதல்வா் ஜ. பரசுராமன் வாழ்த்தினாா்.

முடிவில் பாரதிதாசன் பல்கலைக்கழக இளையோா் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளா் கே. வெற்றிவேல் மாணவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கினாா். ஏற்பாடுகளை மாவட்ட இளையோா் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளா் கு. தயாநிதி, உடற்கல்வித் துறைத் தலைவா் கே. ஜெகதீஷ்பாபு ஆகியோா் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.