ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

ஜல்லிக்கட்டில் காளை முட்டி காயமடைந்தவா் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வம்பனில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை முட்டி காயமடைந்தவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்

Updated On :12 மே 2023, 11:19 pm IST

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வம்பனில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை முட்டி காயமடைந்தவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ஆலங்குடி அருகேயுள்ள வம்பனில் கடந்த ஏப்.13-ஆம் தேதி நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை முட்டி தஞ்சாவூா் மாவட்டம் ஒரத்தநாடு அருகே திருநல்லூரைச் சோ்ந்த சித்திரை மகன் புகழேந்தி (17) காயமடைந்தாா்.

இதையடுத்து புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், பின்னா் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட புகழேந்தி சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். விபத்து குறித்து ஆலங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.