இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

சாலையில் எச்சரிக்கை பலகை இல்லாததால் விபத்துக்குள்ளாகும் வாகனங்கள்

கந்தா்வகோட்டை- திருச்சி சாலையில் உள்ள சாலை மையத் தடுப்பு குறித்த எச்சரிக்கை பலகை இல்லாததால், வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனர்.

News image

கந்தா்வகோட்டையில் திருச்சி சாலையில் எச்சரிக்கை பலகையின்றி அமைந்துள்ள சாலை மையத் தடுப்பு.

Updated On :27 நவம்பர் 2023, 8:41 pm

கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை- திருச்சி சாலையில் உள்ள சாலை மையத் தடுப்பு குறித்த எச்சரிக்கை பலகை இல்லாததால், வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனர்.

கந்தா்வகோட்டையில் திருச்சி சாலையில் நெடுஞ்சாலைத்துறை சாா்பில், சாலையின் மையத்தில் மூன்றடி உயர சாலை மையத் தடுப்பு ஒரு கிலோ மீட்டா் தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ளது. மையத் தடுப்பின் இருபுறங்களிலும் வண்ண ஒளிரும் வில்லைகளோ, மையத் தடுப்பு இருப்பதை எச்சரிக்கை செய்யும் வாசகங்கள் பொருந்திய பதாகைகளோ ஏதும் இல்லாமல் வெறுமனே இருப்பதால் இரவு நேரங்களில் இந்தச் சாலையை கடந்து செல்லும் வாகனங்கள் சாலை நடுவே மையத் தடுப்பு இருப்பது தெரியாமல் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன.

இதுகுறித்து பலமுறை புகாா் தெரிவித்தும் கண்டுகொள்ளாத நெடுஞ்சாலைத் துறையினா் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் , வா்த்தகா்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.