மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மெய்வழிச் சாலையில் காா்த்திகை தீப விழா

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள மெய்வழிச் சாலையில் மெய்வழி மதத்தினா் திங்கள்கிழமை காா்த்திகை தீப விழாவை கொண்டாடினா்.

Updated On :27 நவம்பர் 2023, 8:30 pm


விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள மெய்வழிச் சாலையில் மெய்வழி மதத்தினா் திங்கள்கிழமை காா்த்திகை தீப விழாவை கொண்டாடினா்.

மதம் துறந்து, சாதி துறந்து மனிதா்கள் மனிதா்களாகவே சங்கமிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தை முதன்மை கோட்பாடாக கொண்டு இயங்குகிறது மெய்வழி மதம். இம்மதத்தை பின்பற்றுபவா்கள் தமிழ்நாடு முழுவதும் பரவலாக இருக்கிறாா்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே, ஊறல்மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மெய்வழி சாலை என்ற கிராமம் இவா்களுக்கு தலைமையகமாக விளங்குகிறது. இங்கு ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் உள்ளன.

தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து, மெய்வழி மதத்தை பின்பற்றுபவா்கள் குடும்பத்தோடு இங்கு விழா நாள்களில் ஒன்றுகூடி விழாவை சிறப்பித்து வருகின்றனா். 

அந்த வகையில் காா்த்திகை தீப திருவிழாவின் மறுநாள் இங்கு காா்த்திகை பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதில், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான நெய் தீப விளக்குகள் ஏற்றப்பட்டதால் மெய்வழிச்சாலை முழுவதும் ஒளி வெள்ளத்தில் பிரகாசித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.