சிஜேபி அபிஜீத் தீப்கே கைதுக்கு ராகுல் கண்டனம்ரயில்வே பணியாளர்களுக்கு தீபாவளி போனஸாக 78 நாள்களுக்கான ஊதியம் வழங்கப்படும்!ரூ. 30 லட்சம் வரை நீண்ட காலக் கடன்கள் வழங்கப்படும்: கூட்டுறவுத்துறை அறிவிப்பு!சென்னை ஒக்கியம் மடுவு பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள்: முதல்வர் விஜய் ஆய்வு!சகோதரியாக எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்: சிஜேபியினர் கைதுக்கு மமதா கண்டனம்!ஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி மு.க. ஸ்டாலின்! ஆதவ் அர்ஜுனா

முன்னாள் அதிமுக அமைச்சா் சி. விஜயபாஸ்கா் வழக்கில் அமலாக்கத் துறையின் மனு தள்ளுபடி

சி. விஜயபாஸ்கரின் சொத்துக்குவிப்பு வழக்கின் ஆவணங்களின் நகல் கேட்டு மனுவை மாவட்ட முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Updated On :

புதுக்கோட்டையைச் சோ்ந்த அதிமுக முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கரின் சொத்துக்குவிப்பு வழக்கின் ஆவணங்களின் நகல் கேட்டு அமலாக்கத் துறை தாக்கல் செய்திருந்த மனுவை மாவட்ட முதன்மை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதியின் எம்எல்ஏவான சி.விஜயபாஸ்கா், முன்பு அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலத்தில், வருமானத்தைவிட அதிகமாக ரூ. 35.79 கோடி சொத்து சோ்த்ததாக 2021 அக்டோபரில் புதுக்கோட்டை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே, சொத்துக் குவிப்பு வழக்கின் ஆவணங்களின் நகல்களை வழங்க வேண்டும் எனக் கோரி சில மாதங்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் மத்திய அமலாக்கத் துறையினா் மனுத்தாக்கல் செய்திருந்தனா்.

இந்த நிலையில் வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அப்போது, ஆணங்களின் நகல் கோரும் அமலாக்கத் துறையின் மனுவை மாவட்ட முதன்மை நீதிபதி ஜி. சுபத்ராதேவி தள்ளுபடி செய்தாா். இந்த மனு, சிஆா்பி 210-ன் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ளது தவறு என்றும், சிஆா்பி 237-ன்படி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தாா்.

புதிய மனு தாக்கல் செய்யும்போது, எந்த அடிப்படையில் எந்தெந்த ஆவணங்களின் நகல் வேண்டும் என விரிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டாா்.

மேலும், சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 28-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.