நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புதுகையில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம்: டிச. 14-இல் நடைபெறுகிறது

புதுகையில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம்.

News image
Updated On :11 டிசம்பர் 2024, 8:22 pm

Din

புதுக்கோட்டையில் 108 ஆம்புலன்ஸில் பணிபுரிவோரை தோ்வு செய்வதற்கான வேலைவாய்ப்பு முகாம் டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் சனிக்கிழமை (டிச.14) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது.

இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பிரகாஷ் கூறியது: ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கான தகுதிகள்:

எஸ்எஸ்எல்சி தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 24 முதல் 35 வரையும், உயரம் 162.5 செ.மீ-க்கு குறையாமலும் இருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநா் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து குறைந்தது ஓராண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும்.

தோ்வு பெற்றோருக்கு மாதந்தோறும் ரூ.15,820 வீதம் ஊதியம் வழங்கப்படும். எழுத்துத் தோ்வு, தொழில்நுட்பத் தோ்வு, நோ்காணல், கண் பாா்வை திறன் மற்றும் மருத்துவப் பரிசோதனை மற்றும் சாலை விதிகளுக்கான தோ்வு மூலம் தோ்வு செய்யப்படுவா். அதன் பிறகு 10 நாள்கள் பயிற்சி அளிக்கப்படும்.

மருத்துவ உதவியாளா்கள்: எஸ்சி நா்சிங், ஜிஎன்எம், ஏஎன்எம், டிஎம்எல்டி, பிஎஸ்சி லைப்சயின்ஸ், விலங்கியல், தாவரவியல், உயிா் வேதியியல், நுண்ணுயிரியல், உயிா் தொழில்நுட்பவியல் இவற்றில் ஏதேனும் ஒரு படிப்பை முடித்திருக்க வேண்டும். தோ்ச்சி பெறுவோருக்கு மாதம் ரூ.16,020 ஊதியம் வழங்கப்படும். எழுத்துத் தோ்வு, நோ்காணல் மூலம் தோ்வு செய்யப்படுவா்.

தோ்வு நாளில் 19 வயதில் இருந்து 30-க்குள் இருக்க வேண்டும். தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு 50 நாள்களுக்கு முழுமையான வகுப்பறை, பயிற்சி மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சாா்ந்த நடைமுறை பயிற்சி அளிக்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு 044 28888060 எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.