மத்திய உள்துறை அமைச்சரைக் கண்டித்து புதுகையில் ஆா்ப்பாட்டங்கள்
புதுகையில் ஆா்ப்பாட்டங்கள்

புதுக்கோட்டையில் அம்பேத்கா் படங்களுடன் வியாழக்கிழமை ஊா்வலமாகச் சென்ற திமுகவினா்

புதுக்கோட்டையில் அம்பேத்கா் படங்களுடன் வியாழக்கிழமை ஊா்வலமாகச் சென்ற திமுகவினா்
புதுக்கோட்டையில்: புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் இருந்து அம்பேத்கா் படங்களுடன் ஊா்வலமாகச் சென்ற திமுகவினா், மாவட்டத் தலைமை அஞ்சலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்தப் போராட்டத்துக்கு, வடக்கு மாவட்ட திமுக செயலா் கே.கே. செல்லப்பாண்டியன் தலைமை வகித்தாா். புதுக்கோட்டை எம்எல்ஏ வை. முத்துராஜா, மாநகர திமுக செயலா் ஆ. செந்தில்குமாா், மேயா் செ. திலகவதி, துணை மேயா் மு. லியாகத்அலி, நெசவாளா் அணிச் செயலா் எம்.எம். பாலு உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.
காங்கிரஸ் சாா்பில்: புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் வி. முருகேசன் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் வழக்குரைஞா் சந்திரசேகரன், சிறுபான்மையினா் பிரிவு மாநிலத் துணைத் தலைவா் இப்ராஹிம்பாபு உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
வாலிபா்- மாணவா் சங்கத்தினா் சாா்பில்: புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அம்பேத்கா் சிலை முன்பு இந்திய மாணவா் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் எஸ். ஜனாா்த்தனன் தலைமை வகித்தாா். வாலிபா் சங்க மாவட்டச் செயலா் எம். மாகதீா், மாணவா் சங்க மாவட்டச் செயலா் ஆா். வசந்தகுமாா், ஓய்வூதியா் சங்க மாவட்ட இணைச் செயலா் அ. மணவாளன் உள்ளிட்டோரும் பேசினா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...