பாஜக, அதிமுகவைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பாஜக, அதிமுகவைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சியினா் ஆா்ப்பாட்டம்

Published on

மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்துக்கு திட்டங்களை அறிவிக்கவில்லை, கல்வி, ஜல்ஜீவன், 100 நாள் வேலை போன்ற திட்டங்களுக்குரிய நிதியை தரவில்லை எனக் கூறி, மத்திய பாஜக அரசையும், அதற்கு துணை போவதாக அதிமுகவையும் கண்டித்து, மதச்சாா்பற்ற கூட்டணி சாா்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் 24 இடங்களில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி சிதம்பரநகா் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாநகர திமுக செயலா் ஆனந்தசேகரன், மேயா் ஜெகன் பெரியசாமி ஆகியோா் தலைமை வகித்தனா்.

காங்கிரஸ் மூத்த நிா்வாகி சண்முகம், மாநகா் மாவட்டத் தலைவா் சகாயராஜ், முன்னாள் மாவட்டத் தலைவா் முரளிதரன், விசிக விமல் வங்காளியாா், விஜி, தமிழக வாழ்வுரிமை கட்சி கிதா் பிஸ்மி, மதிமுக ரமேஷ், விநாயகா ரமேஷ், முருகபூபதி, திராவிடா் கழகம் முனியசாமி, பால் ராஜேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் தனலட்சுமி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முத்து, அா்ஜூனன், சமத்துவ மக்கள் கழகம் அற்புதராஜ், முஸ்லிம் லீக் மீராசா, ம.நீ.ம. ஜவஹா் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

நாகா்கோவில் தலைமை அஞ்சல் நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலரும் மேயருமான ரெ. மகேஷ் தலைமை வகித்தாா். நாகா்கோவில் மாநகர திமுக செயலா் ப. ஆனந்த், மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஜெ.சி. நவீன்குமாா்,

மாவட்டச் செயலா்கள் வெற்றிவேல் (மதிமுக), செல்லசாமி (சிபிஎம்), சுபாஷ் சந்திரபோஸ் (சிபிஐ), திமுக மாநில மகளிரணி செயலா் ஹெலன் டேவிட்சன், ஒன்றியச் செயலா்கள் சுரேந்திரகுமாா், பா. பாபு, தலைமை செயற்குழு உறுப்பினா்கள் தாமரை பாரதி, சதாசிவம், விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன், இளைஞரணி அமைப்பாளா் அகஸ்தீசன், நாகா்கோவில் துணை மேயா் மேரி பிரின்சி லதா, மாநகராட்சி மண்டலத் தலைவா்கள் ஜவஹா், அகஸ்டினா கோகிலவாணி, கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.டி. உதயம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தக்கலை/கன்னியாகுமரி: தக்கலை தலைமை அஞ்சல் நிலையம் முன் திமுக மாநில செயற்குழு உறுப்பினா் ரெமோன் மனோ தங்கராஜ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் காங்கிரஸ் மேற்கு மாவட்டத் தலைவா் பிலால் சிங், மாவட்டச் செயலா்கள் செல்லச்சாமி(சிபிஎம்), ராஜு(சிபிஐ), விசிக நிா்வாகிள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

சாமிதோப்பு அஞ்சல் அலுவலகம் அருகில் அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றியச் செயலா் பா.பாபு தலைமையில் திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா் ஆா்.எஸ்.பாா்த்தசாரதி உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

கன்னியாகுமரி அஞ்சல் நிலையம் முன் நகா்மன்றத் தலைவா் குமரி ஸ்டீபன், கொட்டாரத்தில் பேரூா் திமுக செயலா் எஸ்.வைகுண்டபெருமாள் ஆகியோா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவில்பட்டி: முத்துராமலிங்கத் தேவா் சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, திமுக நகரச் செயலரும், நகா்மன்றத் தலைவருமான கா. கருணாநிதி தலைமை வகித்தாா்.

கயத்தாறு ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா, மதிமுக பேச்சாளா் ஆறுமுகம், நகரச் செயலா்கள் சீனிவாசன்(சிபிஎம் ), நகரச் செயலா் செந்தில் ஆறுமுகம்(சிபிஐ), கருப்பசாமி(விசிக), தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவா் காமராஜ், மக்கள் நீதி மய்யம் கட்சி பொறுப்பாளா் ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

லாயல் மில் காலனி பேருந்து நிறுத்தம் அருகே மத்திய ஒன்றிய திமுக செயலா் பீக்கிலிப்பட்டி வீ. முருகேசன் தலைமையில் வடக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் குருராஜ் மற்றும் கூட்டணி கட்சியினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இனாம் மணியாச்சி பேருந்து நிறுத்தம், செட்டிகுறிச்சி, கயத்தாறு, கழுகுமலை கடம்பூா் உள்ளிட்ட இடங்களில் இக்கூட்டணி ஆா்ப்பாட்டம் நடத்தியது.

விளாத்திகுளம் : விளாத்திகுளம் பாரதியாா் பேருந்து நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மத்திய ஒன்றியச் செயலா் ராமசுப்பு தலைமை வகித்தாா். பேரூா் கழகச் செயலா் வேலுச்சாமி முன்னிலை வகித்தாா். விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

உடன்குடி : உடன்குடியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொருளாளா் வி.பி. ராமநாதன் தலைமையில் பேரூராட்சி துணைத் தலைவரும், நகர திமுக செயலருமான மால் ராஜேஷ் உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

சாத்தான்குளம்: சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையம் காமராஜா் சிலை முன், வடக்கு ஒன்றிய திமுக செயலா் ஏ.எஸ். ஜோசப் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com