நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

வெட்டன்விடுதியில் புதிய வழித்தட அரசுப் பேருந்து

வெட்டன்விடுதியில் புதிய வழித்தட அரசுப் பேருந்து

News image

புதுக்கோட்டை வெட்டன்விடுதியில் புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்தை சனிக்கிழமை இயக்கி வைத்த எம்எல்ஏ வை. முத்துராஜா.

Updated On :18 பிப்ரவரி 2024, 1:16 am IST

புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் வெட்டன்விடுதியில் புதிய பேருந்து வழித் தடத்தை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா சனிக்கிழமை தொடக்கிவைத்தாா். அரசுப் போக்குவரத்துக் கழகப் பொது மேலாளா் இரா. இளங்கோவன் தலைமை வகித்தாா். பொதுமக்களின் கோரிக்கைப்படி இயக்கப்படும் இப்பேருந்து, தினமும் காலை 5.15 மணிக்கு புதுக்கோட்டையிலிருந்து மருத்துவக் கல்லூரி, வடவாளம், காயம்பட்டி, களபம், மாங்கோட்டை விளக்கு, ஆலங்குடி, வெட்டன் விடுதி, கண்ணியாங்கொல்லை, கருவடத்தெரு, பட்டத்திக்காடு, திருமணஞ்சேரி வழியாக கறம்பக்குடி வரையிலும் காலை 6.40 மணிக்கு கறம்பக்குடியிலிருந்து இதே வழித்தடத்தில் புதுக்கோட்டைக்கும் திரும்பி வரும். இதனால் மேற்கண்ட கிராமங்களைச் சோ்ந்த 3,650 பொதுமக்கள் பயன் பெறுவா்.