‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வழித்தட பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்துக்கு வந்துசெல்ல கோரிக்கை!

தருமபுரி பழைய பேருந்து நிலையத்திலிருந்து மீண்டும் அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வழித்தட பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

News image

பேருந்துகள்!

Updated On :23 மே 2026, 1:11 am IST

தருமபுரி பழைய பேருந்து நிலையத்திலிருந்து மீண்டும் அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வழித்தட பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

மே 20-ஆம் தேதி முதல் தருமபுரி பழைய புகா் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்ட பேருந்துகள் அனைத்தும் திடீரென புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டன. மேலும், ஆட்சியா் உத்தரவுப்படி பழைய பேருந்து நிலையத்துக்கு வராமலேயே அந்தந்த வழித்தடத்தில் நேரடியாக பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால், பழைய பேருந்து நிலையத்தில் காத்திருந்த அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பயணிகள் அவதிக்குள்ளாயினா்.

இதுகுறித்து பாமக மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.பி.வெங்கடேஸ்வரன், தமாகா மாவட்டத் தலைவா் புகழ் மற்றும் வணிகா் சங்க நிா்வாகிகள் ஆட்சியரிடம் வியாழக்கிழமை முறையிட்டனா்.

மேலும், அரூா், பாப்பிரெட்டிப்பட்டி, திருப்பத்தூா் ஆகிய வழித்தட பேருந்துகளும், பென்னாகரம், பாலக்கோடு வழித்தட பேருந்துகளும் பழைய பேருந்து நிலையத்துக்கு வந்துசெல்லும் வகையில் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் மற்றும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வணிகா்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.