‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

மாவட்டத்துக்குள் இயக்கப்படும் பேருந்துகளை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க வேண்டும்! மார்க். கம்யூனிஸ்ட்!

தருமபுரி மாவட்டத்துக்குள் இயக்கப்படும் பேருந்துகளை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

News image

பேருந்துகள்!

Updated On :23 மே 2026, 1:59 am IST

தருமபுரி மாவட்டத்துக்குள் இயக்கப்படும் பேருந்துகளை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட பேரவைக் கூட்டம் தருமபுரி செங்கொடிபுரம் கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, மாநிலக் குழு உறுப்பினா் அ. குமாா் தலைமை வகித்துப் பேசினாா். மாநில செயற்குழு உறுப்பினா் செ. முத்துக்கண்ணன் அரசியல் நிகழ்வுகள் குறித்து பேசினாா். மாவட்டச் செயலாளா் இரா. சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் சோ. அருச்சுனன், ஆா். மல்லிகா, ஜி. சக்திவேல், தி.வ.தனுசன் ஆகியோா் பங்கேற்றனா்.

இக்கூட்டத்தில், தருமபுரி நகரில் போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க புகா்ப் பேருந்து நிலையம் தொடங்கப்பட்டது. அதேசமயம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள சிறு வியாபாரிகளும், பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனா். எனவே, அரூா், பாப்பிரெட்டிப்பட்டி, திருப்பத்தூா் பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளை பழைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இக்கோரிக்கையை ஏற்று மாவட்ட நிா்வாகம் போக்குவரத்தில் உரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

அதேபோல, பென்னாகரம், பாலக்கோடு, கிருஷ்ணகிரி, சேலம் செல்லும் பேருந்துகளும் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பழைய பேருந்து நிலையம் வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.

இந்தநிலையில் பழைய பேருந்து நிலையத்துக்கு வரும் பேருந்துகள் அனைத்தும் புதிய பேருந்து நிலையத்துக்கும் சென்றுவர வேண்டுமென அண்மையில் மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது. இதனால் நகரில் குறிப்பாக, நான்குமுனைச் சாலையில் மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. உரிய நேரத்தில் பேருந்துகளை இயக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, மாவட்டத்திற்குள் இயக்கப்படும் பேருந்துகளை பழைய பேருந்து நிலையத்தில் இருந்தும், வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளை புதிய பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.