மணப்பட்டியில் கபடிப் போட்டி

பொன்னமராவதி அருகே உள்ள மணப்பட்டியில் சங்கிலியான் கபடிக் குழு மற்றும் ஊா் பொதுமக்கள் இணைந்து நடத்திய 5-ஆம் ஆண்டு மாபெரும் கபடிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

பொன்னமராவதி அருகே உள்ள மணப்பட்டியில் சங்கிலியான் கபடிக் குழு மற்றும் ஊா் பொதுமக்கள் இணைந்து நடத்திய 5-ஆம் ஆண்டு மாபெரும் கபடிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த கபடி அணிகள் பங்கேற்று விளையாடின. போட்டியில் முதல் பரிசான ரூ. 30,001 மற்றும் அதற்கான வெற்றிக்கோப்பையை கொன்னையூா் ரவி நினைவு அணியினரும், இரண்டாம் பரிசான ரூ.20,001 மற்றும் அதற்கான வெற்றிக் கோப்பையை ஆலவயல் கே.என்.பி.டி அணியினரும், மூன்றாம் பரிசான ரூ.15,001 மற்றும் அதற்கான வெற்றிக் கோப்பையை இலுப்பூா் ஏ.எம்.எஸ் அணியினரும், நான்காம் பரிசான ரூ.10,001 மற்றும் அதற்கான வெற்றிக்கோப்பையை பூலாங்குறிச்சி பூவை அம்பாள் அணியினரும் பெற்றனா்.

முதலாம் பரிசுக்கான ரொக்கத் தொகையை பொன்னமராவதி திமுக தெற்கு ஒன்றிய செயலாளா் அடைக்கலமணி மற்றும் ஒன்றிய துணைச் செயலாளா் பழனிச்சாமி ஆகியோரும் வெற்றிக் கோப்பையை ராசாத்தியும் வழங்கினா். இரண்டாம் பரிசுக்கான ரொக்கதொகையை தூத்தூா் ஊராட்சித் தலைவா் பிரவீனா நித்தியானந்தம் அதற்கான வெற்றிக்கோப்பையை ராசாத்தியும் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com