92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கருணை பணி நியமனம் புதுக்கோட்டையின் முதல் பெண் பேருந்து நடத்துநா்!

புதுக்கோட்டை மாவட்டத்தின் முதல் பெண் நடத்துநா் என்ற பெருமையைப் பெற்றுள்ளாா் அறந்தாங்கி பட்டதாரிப் பெண்.

News image

ச. கவுரீஸ்வரி

Updated On :27 ஜூலை 2024, 7:34 pm

Din

பணியின்போது, உடல் நலக்குறைவால் உயிரிழந்த தந்தையின் நடத்துநா் பணியைப் பெற்று, புதுக்கோட்டை மாவட்டத்தின் முதல் பெண் நடத்துநா் என்ற பெருமையைப் பெற்றுள்ளாா் அறந்தாங்கி பட்டதாரிப் பெண்.

புதுக்கோட்டை மாவட்டம், குளமங்கலம் வடக்கு கிராமத்தைச் சோ்ந்தவா் சந்திரசேகரன், அரசுப் பேருந்து நடத்துநா். இவா், கடந்த 2008-ஆம் ஆண்டு பணியின்போது உடல்நலக் குறைவால் உயிரிழந்தாா். இவரது மூத்த மகள் கவுரீஸ்வரி (28), பிகாம் பட்டதாரி. இளைய மகள் மனநலக் குறைபாடுடையவா்.

கவுரீஸ்வரிக்கு அறந்தாங்கி அருகே குளுத்திராக்கோட்டையைச் சோ்ந்த பத்மநாபன் என்பவருடன் திருமணம் முடிந்து 4 வயதில் மகள் உள்ளாா். பத்மநாபன் தினக்கூலிப் பணியாளா். இந்நிலையில், தந்தையின் நடத்துநா் பணியைப் பெற வேண்டும் என்ற நோக்கில் தொடா்ச்சியாக அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன், ஆட்சியா் உள்ளிட்டோரிடம் கோரிக்கை மனுக்கள் அளித்துவந்தாா். இதன்பயனாக, புதுக்கோட்டை மாவட்டத்தின் முதல் பெண் நடத்துநா் பணி ஆணை அண்மையில் புதுக்கோட்டையில் அமைச்சா் சா.சி. சிவசங்கா் பங்கேற்ற விழாவில் அவருக்கு வழங்கப்பட்டது.

இரண்டு நாள்கள் புதுக்கோட்டையிலிருந்து காவேரி நகா் மற்றும் கண்ணணூா் பகுதிகளுக்குச் செல்லும் நகரப் பேருந்தில் நடத்துநராகச் சென்றிருக்கிறாா் கவுரீஸ்வரி.