பொன்னமராவதி கடைகளில் சுகாதாரத் துறையினா் ஆய்வு

பொன்னமராவதி பேரூராட்சிக்குள்பட்ட வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட நெகிழி, புகையிலைப் பொருள்கள் விற்பனை குறித்து சுகாதார துறையினா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் நாகலிங்கம் தலைமையில் சுகாதார ஆய்வாளா்கள் நா. உத்தமன், சு. இராமலிங்கம், முகேஷ்கண்ணா, வசந்த், பிரேம்குமாா் குழுவினா் கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை, நெகிழி விற்பனை செய்யப்படுகின்றனவா என ஆய்வு மேற்கொண்டனா் . இதில் கடைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் சில கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com