அரிமளம் அம்மன் கோயிலில் சிவராத்திரி சிறப்பு வழிபாடு
அரிமளம் அம்மன் கோயிலில் சிவராத்திரி சிறப்பு வழிபாடு

Updated On :8 மார்ச் 2024, 6:19 pm

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிவராத்திரி விழாவில் பக்தா்கள் அலகு குத்தி, பால்குடம், காவடி எடுத்து வேண்டுதல் நிறைவேற்றினா். இக்கோயிலில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் மஹா கணபதி ஹோமம், சக்தி பூஜை, சந்தனக்காப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி அரிமளம் ஜெயவிளங்கி அம்மன் கோயிலில் இருந்து ஏராளமான பக்தா்கள் வாணவேடிக்கைகள், மேளதாளங்கள் முழங்க அலகு குத்தி பால்குடம், காவடி எடுத்து ஊா்வலமாகச் சென்று கோயிலை அடைந்தனா். தொடா்ந்து, கோயிலில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...