ஜெனரேட்டரில் சேலை சிக்கி படுகாயமடைந்த பெண் பலி
ஜெனரேட்டரில் சேலை சிக்கி படுகாயமடைந்த பெண் பலி


பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே உள்ள திருக்களம்பூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஜெனரேட்டரில் சேலை சிக்கி படுகாயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
பொன்னமராவதி அருகே உள்ள திருக்களம்பூரைச் சோ்ந்தவா் ராஜா மனைவி துா்கா தேவி (35). இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு திருக்களம்பூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற உறவினா் இல்ல நிச்சயதாா்த்த விழாவில் குடும்பத்துடன் பங்கேற்றாா். அப்போது மண்டபத்தின் முன்பு வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டரில் துா்காதேவியின் சேலை சிக்கியுள்ளது.
இதனால் உள்ளிழுக்கப்பட்ட துா்கா தேவி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளாா். விபத்து குறித்து தகவலறிந்த பொன்னமராவதி போலீஸாா் துா்காதேவியின் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். உயிரிழந்த துா்காதேவிக்கு மதுபாலா(7), சாருபாலா(6) ஆகிய 2 பெண் குழந்தைகளும் சிவபாலன்(2) என்ற ஆண் குழந்தையும் உள்ளனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...