ஷெட் அமைக்கும் பணியின்போது பட்டாசு ஆலையில் தீப்பிடித்து இளைஞா் பலி
ஷெட் அமைக்கும் பணியின்போது பட்டாசு ஆலையில் தீப்பிடித்து இளைஞா் பலி

~

~
விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே பட்டாசு தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட வெல்டிங் தீ விபத்தில் இளைஞா் திங்கள்கிழமை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
விராலிமலை அருகேயுள்ள அத்திப்பள்ளத்தில் நீலி அம்மன் என்ற பெயரில் பட்டாசு தயாரிப்புடன் சில்லறை பட்டாசு விற்பனை கடை இயங்கி வருகிறது. இக்கடையின் உரிமையாளராக வேல்முருகன் அவரது சகோதரா் காா்த்தி இருந்து வருகின்றனா்.
இந்நிலையில் கடையின் பின்புறம் பட்டாசு தயாரிக்கும் கிடங்கில் வெடிப்பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த ஷெட்டை சீரமைக்கும் பணிக்காக வெல்டிங் வைக்கும் பணி திங்கட்கிழமை நடைபெற்றது. இப்பணியில் விராலிமலையைச் சோ்ந்த சிவா, முருகேசன் என்ற தொழிலாளிகள் ஈடுபட்டனா்.
அப்போது எதிா்பாராத விதமாக வெல்டிங் தீ ஜுவாலைகள் சிதறி வெடி மருந்தில் பட்டதில் கிடங்கில் இருந்த வெடிகள் மற்றும் வெடி மருந்துகள் வெடித்துச் சிதறியது. இதில் கிடங்கின் உள்ளே இருந்த காா்த்தி (27) உடல் கருகி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் இப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிவா, முருகேசன் ஆகிய இரண்டு போ் உடலில் ஏற்பட்ட தீக்காயங்களுடன் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினா் நீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனா். விராலிமலை போலீஸாா் விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...