முதல்வா் கோப்பை போட்டியில் சிறப்பிடம் பெற்றோருக்குப் பாராட்டு
சென்னையில் அண்மையில் நடைபெற்று முடிந்த மாநில அளவிலான முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பல்வேறு பதக்கங்களைப் பெற்ற மாணவா்களை, மாவட்ட ஆட்சியா் மு. அருணா புதன்கிழமை நேரில் அழைத்துப் பாராட்டினாா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் புதன்கிழமை முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் பல்வேறு பதக்கங்களை வென்ற மாணவ, மாணவிகளைப் பாராட்டிய மாவட்ட ஆட்சியா் மு. அருணா.








