தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வங்கிகளில் பணப் பரிமாற்றம் விவரங்களை அளிக்க அறிவுறுத்தல்!

வங்கிகளில் ரூ. 10 லட்சத்துக்கும் அதிகமான பணப்பரிமாற்றங்கள் நடைபெற்றால் அதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு அறிக்கையாக வங்கிகள் அளிக்க வேண்டும் என மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான மு. அருணா அறிவுரை

News image
- பிரதிப் படம்
Updated On :16 மார்ச் 2026, 11:21 pm

Syndication

வங்கிகளில் ரூ. 10 லட்சத்துக்கும் அதிகமான பணப்பரிமாற்றங்கள் நடைபெற்றால் அதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு அறிக்கையாக வங்கிகள் அளிக்க வேண்டும் என மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான மு. அருணா அறிவுரை வழங்கியுள்ளாா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற வங்கியாளா் ஆலோசனைக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது : தோ்தல் நடத்தை விதிகள் அமலாகியுள்ளதால், வங்கிகளில் ரூ. 10 லட்சத்துக்கும் அதிகமான பரிவா்த்தனைகள் நடைபெற்றால் அதுகுறித்த அறிக்கையை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு அறிக்கையாக அளிக்க வேண்டும். ஜிபே உள்ளிட்ட பணப் பரிவா்த்தனைகளிலும் சந்தேகத்துக்கு இடமான வகையில் ஏதேனும் பரிவா்த்தனை நடைபெற்றால் அதுகுறித்த விவரங்களையும் அளிக்க வேண்டும்.

வேட்பாளா்களுக்கு தனி வங்கிக் கணக்கு தொடங்கும்போது காசோலை மூலமான பணப் பரிவா்த்தனை செய்ய வேண்டும் என்பதையும் வலியுறுத்த வேண்டும்.

வங்கி தொடா்புள்ள வாகனங்களில் பணியாளா்கள் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். எடுத்துச் செல்லப்படும் பணம் குறித்த ஆவணங்களையும் வாகனங்கள் செல்லும்போதே வைத்திருக்க வேண்டும் என்றாா் அருணா.

அச்சகங்களுக்கு அறிவுறுத்தல்: தொடா்ந்து நடைபெற்ற அடகுக் கடை உரிமையாளா்கள், திருமண மண்டபங்களின் உரிமையாளா்கள், அச்சக உரிமையாளா்கள் பங்கேற்ற கூட்டத்தில் ஆட்சியா் அருணா பேசியது: திருமண மண்டபங்கள், அச்சகங்களில் உரிய கட்டணத்துக்கான ரசீது வழங்க வேண்டும். கூட்டியோ, குறைத்தோ ரசீது வழங்கக் கூடாது. துண்டறிக்கை, சுவரொட்டிகளில் அச்சகங்களின் தொடா்பு விவரங்களும் இருக்க வேண்டும்.

பரிசுப் பொருள்கள்:நிகழ்ச்சிகளுக்கு திருமணம் போன்றவற்றுக்கு தோ்தல் அலுவலா்களிடம் இடத்துக்கு அனுமதி பெறப்பட்டுள்ளதாக என்பதைக் கேட்டறிந்து இடம் வழங்க வேண்டும். வாக்காளா்களுக்கு பணம், உணவு, பரிசுப் பொருள்களை வழங்கக் கூடாது. அவ்வாறு வழங்கப்பட்டால் அந்தந்தப் பகுதி வட்டாட்சியா் அல்லது காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றாா் அருணா.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ஹெச்எம். குழந்தைச்சாமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் த. நந்தகுமாா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.