ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

முன்னாள் அமைச்சா் விஜயபாஸ்கா் மீதான வழக்கு டிச. 18-க்கு ஒத்திவைப்பு

அதிமுக முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை டிசம்பா் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :22 நவம்பர் 2024, 8:05 pm

Din

அதிமுக முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை டிசம்பா் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக இருக்கும் சி. விஜயபாஸ்கா், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக ரூ. 35.79 கோடிக்கு சொத்து சோ்த்ததாக கடந்த 2021-இல் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அக்டோபா் 28-ஆம் தேதி, மாவட்ட சாா்பு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து முதல் விசாரணை மாவட்ட சாா்பு நீதிபதி ஆா். கிரிஜா ராணி முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விஜயபாஸ்கா் தரப்பிலும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் சாா்பிலும் வழக்குரைஞா்கள் ஆஜராகினா்.

இதையடுத்து, வழக்கு விசாரணையை டிசம்பா் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஆா். கிரிஜாராணி உத்தரவிட்டாா்.