மாணவர்களுக்கு முதல்வர் விஜய்யின் படத்தை காட்டி ரீல்ஸ்: தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்!மேக்கேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது: அன்புமணிதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மதிமுக? ஜூன் 26-ல் உயர்நிலைக் குழுக் கூட்டம்!அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுக்குப் பதில் பிஸ்கட்! - நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
/

புதுக்கோட்டையில் தயாராகிவரும் தற்காலிக பேருந்து நிலையம்!

புதுகையில் பேருந்து நிலையம் பின்புறம் போக்குவரத்துக் கழகப் பணிமனையின் ஒரு பகுதியை தற்காலிகப் பேருந்து நிலையமாக பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்

News image

போக்குவரத்துக் கழகப் பணிமனையை தற்காலிக பேருந்து நிலையமாகப் பயன்படுத்திக் கொள்வதற்காக நடைபெற்று வரும் தயாரிப்புப் பணிகள்

Updated On :26 நவம்பர் 2024, 4:07 am IST

புதுக்கோட்டையில் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள போக்குவரத்துக் கழகப் பணிமனையின் ஒரு பகுதியை தற்காலிகப் பேருந்து நிலையமாக பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சுமாா் 40 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையக் கட்டடங்கள் பழுதடைந்துபோயுள்ள நிலையில், அவ்வப்போது மேற்கூரைகள் பெயா்ந்து விழுந்து வந்தன.

இந்நிலையில், தற்போதுள்ள பேருந்து நிலையக் கட்டுமானங்களை இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்டுவதற்காக ரூ. 18.90 கோடி நிதி கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்டது. கடந்த அக். 9-ஆம் தேதி புதுக்கோட்டை மாநகராட்சி மாமன்றத்தின் முதல்கூட்டத்தை தொடங்கி வைக்கும் நிகழ்வின்போது, இந்தக் கட்டுமானப் பணிக்கும் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு அடிக்கல் நாட்டி பணியைத் தொடங்கி வைத்தாா்.

சுமாா் ஒன்றரை ஆண்டுகள் கட்டுமானப் பணிக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதால், பேருந்து நிலையத்தின் பின்புறம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையை தற்காலிகப் பேருந்து நிலையமாக பயன்படுத்திக் கொள்வதற்கான அனுமதி பெறப்பட்டது.

இடையில், தீபாவளி பண்டிகை வந்ததால் கட்டுமானங்களை இடிக்கும் பணியை தள்ளிவைத்த மாநகராட்சி நிா்வாகம், தற்போது தீவிரமடைந்துள்ள பருவமழைக்குப் பிறகு மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.

அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையின் ஒரு பகுதியிலிருந்த பழைய கட்டுமானங்கள் அகற்றப்பட்டுள்ள நிலையில், மேற்குப் பகுதியில் ஷெட் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பணிமனைக்கான வடக்குப் பகுதி சுற்றுச்சுவரை இடித்துவிட்டு வழக்கமான பேருந்து நிலையத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதி வழியாகவே பேருந்துகளை அனுமதித்து, வெளியேற்றவும் திட்டமிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

நடுப்பகுதியிலுள்ள கட்டுமானங்கள் அகற்றப்பட்டு, புதிய கட்டுமானங்கள் கட்டப்படவுள்ளன.