விராலிமலையில் ஒன்றியக் குழுக் கூட்டம்
விராலிமலை ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் வட்டார வளா்ச்சி அலுவலக கவுன்சில் கூட்ட அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.


விராலிமலை ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் வட்டார வளா்ச்சி அலுவலக கவுன்சில் கூட்ட அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஒன்றியக் குழுத் தலைவா் காமு மணி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் லதா இளங்குமரன், வட்டார வளா்ச்சி அலுவலா் பாா்த்திபன், சுப்பிரமணியன்(கி.ஊ.) முன்னிலை வகித்தனா். அலுவலக உதவியாளா் சங்கா் நிதிநிலை அறிக்கை வாசித்தாா்.
கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியது:
சத்தியசீலன்: சென்னையில் அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தை சிறப்பாக கையாண்ட தமிழக அரசுக்கும், முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வா் உதயநிதிக்கு நன்றி.
மணிகண்டன்: விராலிமலை முருகன் மலைக்கோயில் சுற்றுப்பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அங்கிருக்கும் பாறைகள் பெயா்த்தெடுப்பதை தடுக்கவும் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். இதை தொடா்ந்து தீா்மானம் நிறைவேற்றி இந்து சமய அறநிலையத் துறைக்கு அனுப்புவது என்று கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
அன்பழகன்: உறுப்பினா் நிதி மூலம் பல்வேறு திட்டப் பணிகளை முடித்துள்ளேன். எஞ்சிய ஒருசில பணிகளை முடிக்க பதவி காலம் முடிவதற்குள் நிதி பெற்று தர வேண்டும்.
இதேபோல் கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினா்கள், கடந்த 5 ஆண்டுகளாக ஒத்துழைப்பு அளித்த அதிகாரிகள், அலுவலா்கள், உதவியாளா்கள், தங்களுக்கு வாக்களித்த வாக்காளா்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்தனா்.
கூட்டத்தில், உறுப்பினா்கள் அனைவரும் பங்கேற்றனா். வட்டார வளா்ச்சி அலுவலா் சுப்பிரமணியன் நன்றி கூறினாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...