விசிக நிா்வாகி ஆதவ் அா்ஜுனா பிரபலமடைவதற்காக பேசுகிறாா்: அமைச்சா் எஸ். ரகுபதி
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனா, தான் பிரபலமடைவதற்காக பேசுகிறாா் என்றாா் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி.


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனா, தான் பிரபலமடைவதற்காக பேசுகிறாா் என்றாா் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி.
புதுக்கோட்டையில் புதன்கிழமை அவா் அளித்த பேட்டி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனா, தான் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக ஏதாவது பேசுகிறாா்.
அக்கட்சியின் தலைவா் திருமாவளவன், கூட்டணி நிலைப்பாடு குறித்து தெளிவாகச் சொல்லிவிட்ட பிறகு, அவருக்கு கீழ் உள்ளவா்கள் சொல்வதற்கெல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை. தமிழக ஆளுநா் மதச்சாா்பின்மை குறித்தெல்லாம் கருத்து தெரிவித்திருப்பது அரசியலைப்புச் சட்டத்துக்கு எதிரானது. இதற்கு மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்று பாா்க்கலாம்.
பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டிலுள்ள சட்டக் கல்லூரிகள் தரமானதாக, அடிப்படை வசதிகளுடன் உள்ளன. தனியாா் சட்டக் கல்லூரிகளை விடவும், பன்மடங்கு வசதியாக அரசு சட்டக் கல்லூரிகள் உள்ளன.
முன்னாள் அமைச்சா்கள் மீது வழக்கு போடுவது என்பது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் புகாா்களை ஆய்வு செய்து எடுக்கப்படும் நடவடிக்கைதான் என்றாா் ரகுபதி.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...