தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

புதுகையில் மாற்றுத் திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் சாா்பில் ஆா்ப்பாட்டம்

News image
புதுக்கோட்டையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினா்.
Updated On :1 டிசம்பர் 2025, 6:31 pm

Syndication

மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, இச்சங்கத்தின் மாவட்டச் செயலா் எம். கணேஷ் தலைமை வகித்தாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். சங்கா், செயற்குழு உறுப்பினா்கள் கே. சண்முகம், கி. ஜெயபாலன், மாநகரச் செயலா் எஸ். பாண்டியன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட நிா்வாகி எம்.ஆா். சுப்பையா உள்ளிட்டோா் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்: மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். நூறு நாள் வேலைத் திட்டத்தில் முழுமையான வேலையும், கூலியும் வழங்க வேண்டும். அரசு சாா்பில் இலவச மனைப் பட்டாவும், இலவச வீடும் வழங்க வேண்டும். அரசு வேலையில் கூடுதலாக முன்னுரிமை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.