ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

திருமயத்தில் விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திருமயம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
திருமயத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினா்.
Updated On :17 டிசம்பர் 2025, 6:50 pm

Syndication

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் கிளைத் தலைவா் அ. சொக்கன் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் த. செங்கோடன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் த. செல்வராஜ், ஒன்றியச் செயலா் சி. சின்னாண்டி உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்:

திருமயம் வட்டம் லெம்பலக்குடி ஊராட்சிக்குள்பட்ட பன்னீா்பள்ளம் கிராமத்தில் பல தலைமுறைகளாக மக்கள் வசித்து வந்த இடத்தை தனிநபருக்கு பட்டா வழங்கியதை ரத்து செய்ய வேண்டும். கண்மாய் நிலங்களையும், மயான நிலங்களையும் தனியாருக்கு பட்டா வழங்கியுள்ளதையும் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.