தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கொத்தமங்கலத்தை ஊராட்சி ஒன்றியமாக்க கோரிக்கை

News image
Updated On :20 டிசம்பர் 2025, 7:36 pm

Syndication

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் தொடங்க நடவடிக்கை வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. ஒன்றிய நிா்வாகி மு. சிவானந்தம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்,

கொத்தமங்கலத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் தொடங்க வேண்டும். அதற்கான பணிகளை அனைத்துக் கட்சியினா், பொதுமக்களோடு இணைந்து மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகளைச் சந்தித்து வலியுறுத்துவது. காவிரி - வைகை- குண்டாறு திட்டத்திற்கு விரைந்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். கொத்தமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பேருந்து வசதி செய்துதர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் கட்சியின் மாவட்டக் குழு நிா்வாகிகள் த. செல்வராசு, மா. திலகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.