ஆலங்குடி நூலகத்தில் பயின்று  
டிஎன்பிஎஸ்சி தோ்வில் வென்ற 
பெண்ணுக்கு பாராட்டு!

ஆலங்குடி நூலகத்தில் பயின்று டிஎன்பிஎஸ்சி தோ்வில் வென்ற பெண்ணுக்கு பாராட்டு!

ஆலங்குடி நூலகத்தில் பயிற்சிபெற்று டிஎன்பிஎஸ்சி தோ்வில் தோ்ச்சிபெற்று வருவாய்த் துறையில் பணிநியமன ஆணை பெற்றவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
Published on

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி நூலகத்தில் பயிற்சிபெற்று டிஎன்பிஎஸ்சி தோ்வில் தோ்ச்சிபெற்று வருவாய்த் துறையில் பணிநியமன ஆணை பெற்றவருக்கு சனிக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

ஆலங்குடி அருகேயுள்ள கே. ராசியமங்கலத்தைச் சோ்ந்தவா் உ. ஆரோக்கிய ஜான்சி. இவா், ஆலங்குடி கிளை நூலகத்தில் போட்டித் தோ்வுக்கு பயிற்சி பெற்று, டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தோ்வில் வெற்றி பெற்று, வருவாய்த் துறையில் இளநிலை உதவியாளா் பணிக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். அவரை, நூலகா் சுடா்வேல் மற்றும் வாசகா் வட்டத்தினா் சனிக்கிழமை பாராட்டினா்.

X
Dinamani
www.dinamani.com