ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் வெள்ளிக்கிழமை சாலைப்பணியை தொடங்கி வைத்த அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன்
ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் வெள்ளிக்கிழமை சாலைப்பணியை தொடங்கி வைத்த அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன்

ரூ.3.40 கோடியில் சாலை விரிவாக்கப் பணி: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

கொத்தமங்கலத்தில் வெள்ளிக்கிழமை சாலைப் பணியை தொடங்கி வைத்த அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன்.
Published on

ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் ரூ.3.40 கோடி மதிப்பிலான சாலை விரிவாக்கப் பணியை மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

கொத்தமங்கலத்தில் இருந்து மறமடக்கி செல்லும் சாலை ரூ.3.40 கோடி மதிப்பீட்டில் அகலப்படுத்தும் பணியை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தாா்.

விழாவில், நெடுஞ்சாலை துறை உதவிக்கோட்ட பொறியாளா் ரவிச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் த.செங்கோடன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com